சளித்தொல்லை மற்றும் உடல் வலி பறந்துவிடும், நம் முன்னோர்களின் சூப் குடித்தால் போதும், செய்முறை

661

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக காய்ச்சல் வருவதை நாம் தவிர்க்க முடிவதில்லை. காய்ச்சல் என்பது உடல் சூட்டை மட்டும் கொடுக்காது தலைகளில் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளையும் கொடுக்கிறது.

இதைத் தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப்படி, இப்போது நாம் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி? என்று இங்கே காண்போம்.

இதற்கு தேவையான பொருட்கள் :-

  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • மிளகு – 1/2 டீஸ்பூன்
  • இஞ்சி – ஒரு துண்டு
  • பட்டை – சிறிதளவு
  • வெள்ளைபூண்டு – 10 பற்கள்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • தனியா (மல்லி விதை) – சிறிதளவு
  • கிராம்பு – 7
  • தண்ணீர் – 750 ml
  • உப்பு – தேவையான அளவு

சூப் செய்முறை:-

  1. ஒரு பிரஷர் குக்கரை எடுத்து அடுப்பில் வைக்கவும். குக்கரில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1/2 சீரகத்தையும், மிளகையும், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளையும், தனியாவையும் போடவேண்டும்.
  2. இந்தக் கலவையை நன்கு கிளறவும். பிறகு ஒரு 15 நொடிகளிலிருந்து 20 நொடிகளுக்குப் பிறகு சிறிதளவு பட்டையும் கிராம்பையும் இஞ்சி துண்டையும் தேவைக்கேற்ப உப்பு போட்டு இந்த கலவையை நன்கு கிளறவும்.
  3. ஒரு பத்து நொடிகளுக்குப் பிறகு எடுத்து வைத்திருந்த 750ml தண்ணீரை அதனுள் ஊற்றி நன்கு கலக்கவும்.
  4. பின்னர் அந்த பிரஷர் குக்கரை அடுப்பில் மிதமான சூட்டில் ஒரு பத்து நிமிடங்கள் வைக்கவும். (குறிப்பு :- பிரஷர் குக்கர் உபயோகிக்கவில்லை எனில் வேறொரு பாத்திரத்தில் சமைக்கலாம். ஆனால் தண்ணீர் 750 ml பதில் 1250 ml தண்ணீர் அதில் கலக்கவேண்டும். மேலும் 10 நிமிடங்களுக்கு பதில் 45 நிமிடங்கள் அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவேண்டும்.)

சூப் ரெடி :-

பிறகு அந்தத் தண்ணீரைத் தனியே வடித்து எடுத்துவிட்டு, அதனுள் இருக்கும் இஞ்சி முதலான பொருட்களை நன்கு மசிய வைக்க வேண்டும் பிறகு அந்த திரவத்தை வடிகட்டி மூலம் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். இப்போது அந்த திரவத்துடன் சிறிதளவு தேன் கலந்தால் நம் உடலைக் காக்கும் சூப் ரெடி.

இந்த சூப்பில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விவரங்கள் :-

  • மொத்த கலோரிகள் – 36 கலோரிகள்
  • மொத்த கொழுப்பு – 0.5 கிராம்
  • சாச்சுரேட்டட் கொழுப்பு – .01 கிராம்
  • சோடியம் – 603 mg
  • மொத்த கார்போஹைடிரேட் – 3%

சளித்தொல்லை :-

இந்த சூப்பை காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் மூன்று நாட்களுக்கு குடித்து வந்தால் உடல் வலி பறந்து போய்விடும். மிளகு, இஞ்சி போன்றவை சனி தொல்லைக்கு சிறந்தது என்பதால், சளி மூக்கின் வழியாக நீராக வந்துவிடும். இந்த சூப்பை குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்.