ட்விட்டரில் உலகளவில் முதலிடம் பிடித்த #GoBackModi

1011

#GoBackModi என்பது ட்விட்டரில் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். அவரது வருகையையொட்டி 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பலத்த பாதுகாப்பையும் மீறி பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்புக் கொடியுடன் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். திரைத்துறையினர் சிலர் விமான நிலையத்திற்குள் போராடினர்.

இந்தப் போராட்டங்கள் குறித்த செய்திகள் மற்றும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கருத்துகள் அனைத்தும், #GoBackModi என ட்விட்டரில் பகிரப்பட்டு வந்தது. இந்த ஹேஷ்டேக் சற்று நேரத்தில் சென்னை அளவில் ட்ரெண்டாகி, பின்னர் இந்திய அளவில் ட்ரெண்டானது. சில மணி நேரத்தில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து, உலக அளவில் 4ஆம் இடத்தை பிடித்தது. இந்நிலையில் #GoBackModi எனக் குறிப்பிடப்பட்டு உலக அளவில் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்விட்கள் பதிவிடப்பட்டுள்ளன. இதன்மூலம் உலக அளவில் #GoBackModi என்பது முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Web edition www.saanvika.in