மகனின் அன்பு (Heart touching story)

924

மகன் தனது தந்தையை ஒரு மாலை உணவிற்கு உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். தந்தை மிகவும் வயதானவராகவும், பலவீனமாகவும் இருப்பதால், உணவு உண்ணும் போது, ​​அவரது சட்டையில் உணவை சிந்திவிட்டார். அவரது மகன் அமைதியாக இருந்த சமயத்தில் மற்றவர்கள் அவரை வெறுப்புடன் கவனித்தனர்.

Source: Dreamstime.com

அவர் சாப்பிட்டபிறகு, அவரது மகன் அமைதியான முறையில் அவரது சட்டையை கழுவி சாப்பிட்ட உணவு துகள்களை துடைத்தார், தனது தந்தையின் தலைமுடியை சரி செய்து அவரது கண்ணாடியை சரியாக பொருத்தினார். அவர்கள் வெளியே வந்தபோது, ​​முழு உணவகமும் மெளனத்தில் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தது.

மகன் உணவு அறுந்தியதற்கான பணத்தை செலுத்தி விட்டு தனது அப்பாவுடன் நடந்து செல்ல ஆரம்பிதான்.

அப்பொழுது உணவு அருந்தி கொண்டிருந்த ஒரு முதியவர் அவர்களை அழைத்தார். தம்பி தாங்கள் எதையோ இங்கு விட்டு செல்கிறீர்கள் என்றார்.

மகன் பதிலளித்தார், “இல்லை ஐயா, நான் எதையும் விட்டு செல்லவில்லை”.

அதற்கு அந்த முதியவர் “ஆமாம், நீங்கள்! ஒவ்வொரு மகனுக்கும் ஒரு பாடத்தை யும் மேலும் ஒவ்வொரு தந்தைக்கும் நம்பிக்கையையும் விட்டு செல்கிறீர்கள் என்றார்.